தமிழ்நாடு

அரசியலில் இருந்து விலகுகிறேன்; யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம்: அறிவித்தார் தீபா

முழுமையாக அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொதுச் செயலருமான தீபா அறிவித்துள்ளார்.

DIN


முழுமையாக அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொதுச் செயலருமான தீபா அறிவித்துள்ளார்.

தனது பேஸ்புக் பக்கத்தில் தீபா இது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

எனக்கு அரசியலே வேண்டாம், என்னை தொலைபேசியில் யாரும் அழைக்க வேண்டாம். மீறி அழைத்தால் காவல்துறையிடம் புகார் செய்வேன்.

எனது பேரவையை அதிமுகவோடு இணைத்து விட்டேன். விருப்பம் இருந்தால் அந்த கட்சியில் சேர்ந்து கொள்ளுங்கள். 

எனக்கென்று ஒரு குடும்பம் உள்ளது. அதுதான் எனக்கு முக்கியம். யாரும் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் தீபா அறிவித்துள்ளார்.

முன்னதாக மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுகவை எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை ஆதரிக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெ.தீபா கூறியிருந்தார்.

மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுகவை ஆதரிக்கிறோம். அதிமுகவுடன் எங்கள் கட்சியை இணைப்பது குறித்த பேச்சுவார்த்தை 3 மாதங்களாகவே நடைபெற்று வருகிறது.  எங்களின் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் அதிமுகவுடன் இணைய வேண்டும் என்றுதான் கூறியுள்ளனர். இப்போது தேர்தல் நேரம் என்பதால், அது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முடியவில்லை. தேர்தல் முடிந்த பிறகு இணைப்பு குறித்து பேச்சு நடத்தப்படும். அதிமுகவிடம் இருந்து எந்தப் பொறுப்பையும் நான் கேட்கவில்லை.

மக்களவைத் தேர்தலில் பிரசாரம் செய்ய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்தால் பிரசாரம் செய்வேன். ஜெயலலிதாவின் மரணம் குறித்து சந்தேகம் எழுப்பியிருந்தேன். அது குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், முழுமையாக அரசியலில் இருந்து விலகுவதாக தீபா அறிவித்திருப்பது எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தொண்டர்களைக் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT