தமிழ்நாடு

படகு பழுதானதால் ஆழ்கடலில் தத்தளிக்கும் கன்னியாகுமரி மீனவர்கள் 

படகு பழுதானதன் காரணமாக கன்னியாகுமரி மீனவர்கள் சிலர் ஆழ்கடலில் தத்தளித்து வரும் தகவல்கள் வெளியாகியுள்ளன

DIN

சென்னை: படகு பழுதானதன் காரணமாக கன்னியாகுமரி மீனவர்கள் சிலர் ஆழ்கடலில் தத்தளித்து வரும் தகவல்கள் வெளியாகியுள்ளன

கடந்த 18 ந்தேதியன்று கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க 20 பேர் சென்றுள்ளனர். இவர்களில் 15 பேர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

லட்சத்தீவு அருகேயுள்ள தித்திரா தீவுப் பகுதியில் சென்றபோது இவர்கள் சென்ற இரண்டு  படகுகள் திடீரென பழுதடைந்துள்ளது.

இவ்வாறு படகுகள் நடுக்கடலில் பழுதானதால் உணவு, குடிநீரின்றி அதில் உள்ள மீனவர்கள் தத்தளித்து வருகின்றனர். இவர்களில் 15 பேர் குமரி மாவட்டம் சின்னத்துறை கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மொத்தமாக 20 மீனவர்கள் ஆழ்கடலில் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹாங்காங்கை போராடி வென்றது இலங்கை

அனுமதியின்றி மணல் அள்ளுவதை தடுக்க வலியுறுத்தல்

லால்புரத்தில் வீட்டுமனை பட்டா கோரி நரிக்குறவா்கள் மனு

இந்திய வீரா்கள் கைகுலுக்க மறுத்த விவகாரம்: ஆட்டத்தின் நடுவரை நீக்கக் கோரும் பாகிஸ்தான்

தருமபுரி, கிருஷ்ணகிரியில் ‘அன்புக் கரங்கள்’ திட்ட தொடக்க விழா

SCROLL FOR NEXT