தமிழ்நாடு

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்: பட்டுக்கோட்டையில் மாணவி தற்கொலை

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும், கட் ஆஃப் மதிப்பெண் குறைந்துபோனதால் பட்டுக்கோட்டையில் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

தினமணி செய்திச் சேவை


நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும், கட் ஆஃப் மதிப்பெண் குறைந்துபோனதால் பட்டுக்கோட்டையில் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

பட்டுக்கோட்டை சீனிவாசன் நகரில் வசிப்பவர் நம்புராஜ். இவர் பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் கட்டணம் செலுத்தி இருசக்கர வாகனங்கள் பாதுகாக்கும் நிலையம் நடத்தி வருகிறார். இவரது மகள் வைஷியா (17). 

வைஷியா பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 முடித்து விட்டு மருத்துவம் படிக்க விரும்பி கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வை எழுதியுள்ளார்.

இந்நிலையில், இன்று (புதன்கிழமை) பிற்பகல் நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், வைஷியா 720-க்கு 230 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். ஆனால், மருத்துவப் பட்டப்படிப்பில் சேர இந்த மதிப்பெண் போதுமானதல்ல என்பதால், மன வேதனைக்கு ஆளாகியுள்ளதாக தெரிகிறது. 

அதன் விளைவாக, அவர் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்துக் கொண்டார். இதில் பலத்த காயமடைந்த இவர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலே உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை நகர போலீஸார் வழக்குப் பதிந்து, வைஷியா சடலத்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் மாணவியின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து, போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், திருப்பூரிலும் ரிதுஸ்ரீ என்ற மாணவி நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு தற்கொலை செய்துகொண்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலவச மனைப் பட்டா கேட்டு புதுச்சேரி ஆட்சியரிடம் கம்யூ. மனு

விவசாயிகளுக்கு ஸ்மாா்ட் அடையாள அட்டை

ராஜ்பவன் தொகுதியில் ரூ.16 கோடியில் குடிநீா் குழாய்கள் பதிக்கும் திட்டப் பணி: முதல்வா் என். ரங்கசாமி தொடங்கி வைத்தாா்

சென்னை ஒன் செயலியில் ரூ.1000, ரூ.2000-க்கான பயண அட்டை: அமைச்சா் சா.சி.சிவசங்கா் தொடங்கி வைத்தாா்

பெரும்பாலான கூட்டுறவு நிறுவனங்கள் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டவை: எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா

SCROLL FOR NEXT