தமிழ்நாடு

நீங்கள் ஏன் மோசடி வழக்கை எதிர்கொள்ளக் கூடாது?: திமுக எம்.எல்.ஏவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி 

DIN

சென்னை: நீங்கள் ஏன் மோசடி வழக்கை எதிர்கொள்ளக்கூடாது? என்று அரவக்குறிச்சி திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

முந்தைய 2011-16 ஜெயலலிதா ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.95  லட்சம் மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது அவரது நண்பர் கணேஷ்குமார் மத்திய குற்றப்பிரிவில் புகார் கூறியிருந்தார்.

தற்போது செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்து சமீபத்தில் நடந்த அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தேர்தலில்  போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டார்.

இந்நிலையில் நீங்கள் ஏன் மோசடி வழக்கை எதிர்கொள்ளக்கூடாது? என்று அரவக்குறிச்சி திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

செந்தில் பாலாஜி மீதான போக்குவரத்து துறை வேலைவாய்ப்பு மோசடி வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது இந்த வழக்கை விசாரிப்பதற்கான அடிப்படை  முகாந்திரம் உள்ளதால், வழக்கை ஏன் எதிர்கொள்ளக்கூடாது என செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

SCROLL FOR NEXT