தமிழ்நாடு

கால்நடை மருத்துவப் படிப்பு: ஜூலை 3-ஆவது வாரத்தில் கலந்தாய்வு

DIN


கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 3-ஆவது வாரத்தில் நடைபெற உள்ளது. அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ் சென்னை, நாமக்கல்,  திருநெல்வேலி,  ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டு கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புகளுக்கு (பிவிஎஸ்சி- ஏ.ஹெச் / பி.டெக்) 460 இடங்கள் உள்ளன. 
இந்த நிலையில் 2019-2020-ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் 8-ஆம் தேதி தொடங்கியது. திங்கள்கிழமை (ஜூன் 10) வரை அதற்கு அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில்,  விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு வரும் 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதனிடையே, விண்ணப்பப் பதிவு தொடங்கியது முதல் தற்போது வரை பிவிஎஸ்சி - ஏ.ஹெச்., படிப்புக்கு 14,666 மாணவர்களும், பி.டெக் படிப்புக்கு 2,592 மாணவர்களும் விண்ணப்பித்திருப்பதாக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்திருந்தது.
இந்தச் சூழலில், ஜூலை 3-ஆம் வாரத்தில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும் என்று கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கால்நடை மருத்துவ இளநிலை பட்டப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் பல்கலைக்கழக இணையதளத்தில்  (www.tanuvas.ac.in)  இரு வாரங்களுக்குப் பிறகு வெளியிடப்பட உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

ஹேமந்த் சோரன் ஜாமீன் மனு மே 6ல் விசாரணை!

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

SCROLL FOR NEXT