தமிழ்நாடு

எழுத்தாளர் அமிதாவ் கோஷுக்கு ஞானபீட விருது

DIN


பிரபல ஆங்கில எழுத்தாளர் அமிதாவ் கோஷுக்கு 54-ஆவது ஞானபீட விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
கடந்த 2018-ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருதுக்கு புகழ்பெற்ற எழுத்தாளர் அமிதாவ் கோஷ் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. அதில், மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி, அமிதாவ் கோஷுக்கு ஞானபீட விருதினை வழங்கி கெளரவித்தார்.
ஆங்கிலத்தில் நாவல்களையும், கட்டுரைகளையும் எழுதியுள்ள அமிதாவ் கோஷ், ஞானபீட விருது பெறும் முதல் ஆங்கில எழுத்தாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இந்தியாவின் மிக முக்கியமான விருது தனக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறிய அமிதாவ் கோஷ், முதல் முறையாக ஆங்கில இலக்கியப் பணிக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT