தமிழ்நாடு

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்

DIN


பிரமோற்சவத்தையொட்டி, திருநள்ளாறு தர்பாரண்யேஸ்ரர் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற செண்பக தியாகராஜ சுவாமி, நீலோத்பாலாம்பாள் வீற்றிருந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சப்த விடங்க தலங்களுள் ஒன்றாக விளங்கும் இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரமோற்சவம் கடந்த மே 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமிகள் வீதியுலா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக புதன்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு தேருக்கான பூஜைகள் செய்யப்பட்டு காலை 6 மணியளவில் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.  முன்னதாக செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் விநாயகர், வள்ளி தேவசேனா சமேத  சுப்ரமணியர், 
சண்டிகேசுவரர், நீலோத்பாலாம்பாளுடன் செண்பக தியாகராஜசுவாமி தேருக்கு எழுந்தருளினர். அப்போது யதாஸ்தானத்திலிருந்து செண்பக தியாகராஜசுவாமி உன்மத்த நடனத்தில் எழுந்தருளினார்.
வலம் வந்த 5 தேர்கள்: பெரிய தேரில் செண்பக தியாகராஜசுவாமியும், சிறிய தேரில் நீலோத்பாலாம்பாளும் வீற்றிருந்தனர். விநாயகர், வள்ளி  தேவசேனா சமேத சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் தனித்தனி தேரில் வீற்றிருந்தனர். விநாயகர், சுப்ரமணியர், செண்பக தியாகராஜ சுவாமி, நீலோத்பாலாம்பாள், சண்டிகேசுவரர் தேர்கள் என வரிசைப்படி இழுக்கப்பட்டன.திரளானோர் தேரோட்டத்தில் கலந்துகொண்டு 5 தேர்களை இழுத்துச் சென்றனர். கோயிலுக்கு கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு வீதிகளின் வழியே தேர் இழுத்துச் செல்லப்பட்டு மாலை நிலையை அடைந்தது.
நிகழ்ச்சியில், புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜா, உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT