முகப்பு
தமிழ்நாடு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை தில்லி பயணம் 

நிதி ஆயோக் அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தில்லி செல்கிறார்.

Updated On : 13 ஜூன், 2019 at 5:10 PM
பகிர்:

சென்னை: நிதி ஆயோக் அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தில்லி செல்கிறார்.

பிரதமர் மோடி தலைமையில் தில்லியில் வரும் 15-ம் தேதி நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை தில்லி செல்கிறார். அவருடன் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனும் உடன் செல்கிறார்.

முதல்வர் பழனிசாமி தில்லியில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களை சந்தித்துப் பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.