தமிழ்நாடு

தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளுக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு 

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

DIN

சென்னை: தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சரியான அளவில் மழை பெய்யாத காரணத்தால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில்   தற்போது கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. வரும் பருவமழைக்காலமாவது தேவையான நீரை அளிக்கும் என்று அனைவரும் ஏக்கத்தில் உள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெள்ளியன்று அரசாணையை வெளியிட்டுள்ளது.

அதன்படி தமிழகம் முழுவதும் குடிமராமத்து பணிகளுக்கு என ரூ.499.68 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதில் சென்னை மண்டலத்திற்கு ரூ.93 கோடியும், திருச்சி மண்டலத்திற்கு ரூ.109 கோடியும்   ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல மதுரை மண்டலத்திற்கு ரூ.230 கோடியும், கோவைக்கு ரூ.66 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்: குற்றவாளிகளைப் பிடித்தது எப்படி? காவல் ஆணையர் பேட்டி! | CBE

பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த முன்னாள் போட்டியாளர்கள்!

பாமக எம்எல்ஏ அருள் சென்ற காரை வழிமறித்து தாக்குதல்! அன்புமணி காரணமா?

SCROLL FOR NEXT