தமிழ்நாடு

தண்ணீர் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம்; சிக்கனமாக பயன்படுத்துங்கள்: எஸ்.பி. வேலுமணி

DIN


கோவை: தண்ணீர் பிரச்னை குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்; கிடைக்கும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார்.

கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி. வேலுமணி, தண்ணீர் பிரச்னை குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

குடிநீர் பிரச்னையை தீர்க்க அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு முதல்வர் அடிக்கல் நாட்ட உள்ளார்.

கிராம பஞ்சாயத்துக்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் அனுப்பி வைக்கப்படுகிறது. மழைப் பொழிவு இல்லாததால் கடும் வறட்சி நிலவி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கிடைக்கும் நீர் ஆதாரங்களை மட்டும் நம்பாமல் மாற்று ஏற்பாடுகள் மூலம் குடிநீர் பெறப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் பிட்சாடன மூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம்

முதுகெலும்பு அழற்சி: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் விழிப்புணா்வு

SCROLL FOR NEXT