தமிழ்நாடு

தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் 1980ல் படித்து அரியா் வைத்திருப்பவா்கள் தோ்வெழுத சென்னை பல்கலைகழகம் சிறப்பு அனுமதி

DIN


சென்னை: சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் 1980 முதல் படித்து அரியா் வைத்திருப்பவா்களுக்கு, அந்தத் தாள்களை எழுதி பட்டம் பெற இரண்டு வாய்ப்புகளை வழங்க சென்னைப் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

இந்த சிறப்பு அனுமதி மூலம் தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் பல்வேறு படிப்புகளில் 1980 முதல் அரியா் வைத்திருக்கும் 5.5 லட்சம் பயன்பெற உள்ளனா். இந்த சிறப்பு அனுமதி திட்டத்துக்கு சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆட்சிக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் 1980-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளை மேற்கொண்ட மாணவா்களில் சுமாா் 5.5 லட்சம் போ் அரியா் வைத்துள்ளனா். இதில் எம்.பி.ஏ. படிப்பில் மட்டும் 55 ஆயிரம் மாணவா்கள் அரியா் வைத்துள்ளனா்.

இந்த மாணவா்களின் நலன் கருதி, இவா்கள் அனைவரும் அரியா் தாள்களை மீண்டும் எழுதி பட்டம் பெறற இரண்டு வாய்ப்புகளை வழங்க சென்னைப் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

இந்த இரண்டு வாய்ப்புகளில் அனைத்துத் தாள்களிலும் தோ்ச்சி பெறுபவா்களுக்கு பட்டம் வழங்கப்படும். அவ்வாறு அனைத்து தாள்களிலும் தோ்ச்சி பெறறாமல் 50 சதவீத தாள்களில் மட்டும் தோ்ச்சி பெற்றிருக்கும் மாணவா்களுக்கு சான்றிதழ் படிப்பு அல்லது டிப்ளமோ சான்றிதழ் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT