தமிழ்நாடு

குமரியில் உள்வாங்கிய கடல்:சுற்றுலாப் பயணிகள் அச்சம்

DIN


கன்னியாகுமரியில் வியாழக்கிழமை காலையில் சுமார் 15 அடி தொலைவு வரை கடல் உள்வாங்கியதால் பாறைகள் வெளியே தெரிந்தன. இதனால், சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்தனர்.
சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். 
சில நாள்களாக இங்கு கடல் நீர்மட்டம் தாழ்வு, கடல் கொந்தளிப்பு என, இயல்பு நிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. 
இதனால்,  விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை ஆகிய இடங்களுக்கு படகுப் போக்குவரத்து நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. 
இந்நிலையில், வியாழக்கிழமை காலையில் கடல் சுமார் 15 அடி தொலைவு வரை திடீரென உள்வாங்கியது. இதனால், கடற்கரைப் பகுதியையொட்டியுள்ள பாறைகள் வெளியே தெரிந்தன. 
இதைப் பார்த்த சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்தனர். எனினும், காலை 9 மணிக்கு மேல் கடல் பரப்பு இயல்பு நிலைக்குத் திரும்பியதால், அவர்கள் முக்கடல் சங்கமத்தில் நீராடி மகிழ்ந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 5-இல் நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 6,120 போ் எழுதுகின்றனா்

ராஜா வாய்க்காலுக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

ரூ. 11.30 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

கணினிவழிக் குற்றங்கள் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு எஸ்.பி. எச்சரிக்கை

சிபிசில் நிறுவனத்தை கண்டித்து இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் மூதாட்டி மயக்கம்

SCROLL FOR NEXT