தமிழ்நாடு

இரண்டு குட்டிகளுடன் உலவும் கரடி!

DIN

குன்னூரில் இருந்து அரவேணு செல்லும் சாலையில், இரண்டு குட்டிகளை முதுகில் சுமந்துகொண்டு சென்ற கரடியை சுற்றுலாப் பயணிகள் புதன்கிழமை கண்டு மகிழ்ந்தனர்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு அருகிலுள்ள வனப் பகுதிகளில் இருந்து சமீபகாலமாக வன விலங்குகள் தண்ணீர்,  உணவைத் தேடி நகரம் மற்றும் கிராமப் பகுதிகளுக்கு கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கியுள்ளன. வன விலங்குகளை வனத் துறையினர் காட்டுக்குள் துரத்தினாலும் மீண்டும் அவை வந்து விடுகின்றன. 
குன்னூரில் இருந்து அரவேணு  செல்லும் சாலையில் அளக்கரை பெந்தன் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில், இரண்டு குட்டிகளை முதுகில் சுமந்துகொண்டு தாய் கரடி ஒன்று வெகு நேரம் அங்கேயே புதன்கிழமை சுற்றித் திரிந்தது. 
அந்த வழியாக வந்த சுற்றுலாப் பயணிகள் கரடி சாலையைக் கடக்கும் வரை வாகனங்களை நிறுத்தி வழிவிட்டனர். மேலும்  இந்தக் காட்சியை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் செல்லிடப்பேசியில்  படம் பிடித்து மகிழ்ந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

SCROLL FOR NEXT