தமிழ்நாடு

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலை.: ஜூன் 29-இல் பட்டமளிப்பு விழா 

DIN


தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 31-ஆவது பட்டமளிப்பு விழா சென்னையில் வரும் சனிக்கிழமை (ஜூன் 29) நடைபெறுகிறது. 
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 31-ஆவது பட்டமளிப்பு விழா சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா அரங்கில் சனிக்கிழமை (ஜூன் 29) நடைபெற உள்ளது. இந்த விழாவில் இளநிலை, முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவம், செவிலியர், மருந்தாளுநர் படிப்புகளை நிறைவு செய்த 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டம் பெற உள்ளனர்.
சிறப்பிடம் மற்றும் தங்கப் பதக்கம் பெற்ற 139 மாணவர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேரடியாக பட்டங்களை வழங்கி கெளரவிக்கிறார். சிறப்பு விருந்தினராக கலந்துக் கொள்ளும் ஹிமாச்சலப் பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன் பட்டமளிப்பு விழா சிறப்புரையாற்ற உள்ளார். சுகாதாரத் துறை அமைச்சரும், பல்கலைக்கழகத்தின் இணைவேந்தருமான சி.விஜயபாஸ்கர், துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன், பதிவாளர் பரமேஸ்வரி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

SCROLL FOR NEXT