தமிழ்நாடு

மழை நீர் சேமிப்பு திட்டத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்: ரஜினிகாந்த்

DIN

மழை நீர் சேமிப்புத் திட்டத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மும்பையில் நடைபெற்று வந்த தர்பார் படப்பிடிப்பில் கலந்துகொண்டு சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

ரஜினி மக்கள் மன்றம் சார்பில் குடிநீர் விநியோகிக்கப்படுவது நல்ல விஷயம். அவர்களை மனமார பாராட்டி, வாழ்த்துகிறேன். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க மழைநீரை சேகரிக்க வேண்டியது மிக அவசியம். ஏரிகள், குளங்களை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும். 

தமிழக அரசு மழை நீர் சேமிப்புத் திட்டத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க முடியாதது நிச்சயமாக வருத்தமளிக்கிறது. சரியான நேரத்தில் தபால் வாக்கு வந்து சேராத காரணத்தால் வாக்களிக்க இயலவில்லை என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

6 மாதங்களில் 100 திரையரங்குகள் மூடல்!

ஜார்க்கண்ட் அமைச்சருக்கு 6 நாள் அமலாக்கத்துறை காவல்!

3 மாவட்டங்களில் அதி கனமழை: சிவப்பு எச்சரிக்கை!

பாரதிய ஜனதாவில் கால் பங்கு வேட்பாளர்கள் கட்சிமாறி வந்தவர்கள்!

பொய்களால் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயல்கிறது: மோடி!

SCROLL FOR NEXT