தமிழ்நாடு

தமிழகத்தில் ரூ.1,558 கோடியில் புதிய சாலை-பாலப் பணிகள்:   முதல்வர் பழனிசாமி அடிக்கல்

தமிழகத்தில் ரூ.1,558 கோடியில் புதிய சாலை மற்றும் பாலப் பணிகளுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

DIN

தமிழகத்தில் ரூ.1,558 கோடியில் புதிய சாலை மற்றும் பாலப் பணிகளுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அடிக்கல் நாட்டினார். காணொலிக் காட்சி மூலமாக தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:- 
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பாலமலை சாலையில் கட்டப்பட்டுள்ள பாலத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4 சாலைப் பணிகள், வேலூர் மாவட்டத்தில் 6 பணிகள், விழுப்புரத்தில் 5 சாலைப் பணிகள், கடலூரில் 2 பணிகள், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், திருநெல்வேலி மாவட்டங்களில் தலா ஒரு சாலைப் பணிகள் என மொத்தம் ரூ.1558.36 கோடி மதிப்பிலான பணிகளுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
பொதுப்பணித் துறை: நெடுஞ்சாலைத் துறையைப் போன்றே, பொதுப்பணித் துறை சார்பிலான திட்டப் பணிகளுக்கும் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கட்டினையும் முதல்வர் திறந்து வைத்தார். 
மேலும், திருநெல்வேலி மாவட்டம் வீரகேரளம்புதூரில் கட்டப்பட்ட 2 தடுப்பணைகள், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உப்போடை ஆற்றின் குறுக்கே தடுப்பணை, கன்னியாகுமரி மாவட்டம் இரையுமன்துறையில் தடுப்பணை என நான்கு தடுப்பணைகள் கட்டும் பணிக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐபிஎல் மினி ஏலம்! கடைசி நேரத்தில் அபிமன்யு ஈஸ்வரன் உள்பட 19 பேர் சேர்ப்பு!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் திடீர் திருப்பம்!குற்றப்பத்திரிகையை ஏற்க நீதிமன்றம் மறுப்பு

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

SCROLL FOR NEXT