தமிழ்நாடு

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவி ஒதுக்கீடு

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

DIN

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக திமுக, அதன் தோழமை கட்சிகளுடன் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 

திமுக தலைமையிலான கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், இந்திய முஸ்லீம் லீக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. 

இதையடுத்து, திமுக - மதிமுக இடையே 3ம் கட்ட பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலத்தில் இன்று நடைபெற்றது. இதில் மதிமுகவுக்கு ஒரு மக்களவைத் தொகுதி, ஒரு மாநிலங்களைத் சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் இன்று கையெழுத்திட்டனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,
எந்த சின்னத்தில் போட்டியிடுவோம் என்பது குறித்து தற்போது கூற இயலாது. 21 தொகுதி இடைத்தேர்தலிலும் திமுகவுக்கு, மதிமுக ஆதரவு அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சீன தலைநகரில் கடும் வெள்ளம்: 80,000 பேர் வெளியேற்றம்! இருளில் மூழ்கிய 136 கிராமங்கள்!

அதிக ரிஸ்க், அதிக பலன்... காயம் குறித்து பென் ஸ்டோக்ஸ்!

வெள்ளத்தில் மிதக்கும் பெய்ஜிங்: 44 பேர் பலி, 9 பேர் மாயம்!

கல்லறையிலும் க்யூஆர் கோடு! நினைவலைகளைப் புதுப்பிக்க புதிய முயற்சி!!

ஓவல் டெஸ்ட்: இந்தியா பேட்டிங்! ஜஸ்பிரீத் பும்ரா, கம்போஜ் நீக்கம்!

SCROLL FOR NEXT