தமிழ்நாடு

முரசொலி செல்வம் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்குத் தடை

DIN


முரசொலி பத்திரிகை ஆசிரியர் செல்வம் மீதான அவதூறு வழக்குத் தொடர்பான சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சென்னை உயர் நீதிமன்றத்தில் முரசொலி செல்வம் தாக்கல் செய்த மனுவில், மக்கள் பிரதிநிதியாக நான் இல்லாத போது என் மீது தொடரப்பட்ட வழக்குகளை எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற எந்த முகாந்திரமும் இல்லை. எனவே என் மீதான வழக்குகளை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றிப் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார்.  
இந்த மனு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சிறப்பு நீதிமன்றம் எந்த மாதிரியான வழக்குகளை விசாரிக்கும் என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிட்டு, பதிவாளரை இந்த வழக்கில் எதிர்மனுதாரராகச் சேர்த்து உத்தரவிட்டார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT