சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்து காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம் ட்விட்டரில் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விரைவில் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைவதை தேமுதிக நீண்ட இழுபறிக்குப் பிறகு ஞாயிறன்று இரவு உறுதி செய்து, கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்து காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம் ட்விட்டரில் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது குறித்த செய்தியொன்றை தனது ட்வீட்டில் குறிப்பிட்டு கார்த்தி சிதம்பரம் கூறியிருந்தாவது:
கேப்டனாக இருந்து
சிப்பாயாய் மாறி
சிப்பந்தியாய் மாறி
சின்னாபின்னமானவர் தான்
நம்ம விஜயகாந்த்..
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.