முகப்பு
தமிழ்நாடு

டிஜிபி ராஜேந்திரனை மாற்ற உத்தரவிட முடியாது: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக காவல்துறை டிஜிபி ராஜேந்திரனை மாற்றுவது குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்கலாம் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு

டிஜிபி ராஜேந்திரனை மாற்ற உத்தரவிட முடியாது: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக காவல்துறை டிஜிபி ராஜேந்திரனை மாற்றுவது குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்கலாம் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:21 AM
பகிர்:


மதுரை: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக காவல்துறை டிஜிபி ராஜேந்திரனை மாற்றுவது குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்கலாம் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலின்போது தமிழக டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரன் செயல்பட தடை விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் திங்கள்கிழமை முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்ததோடு, இது குறித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.
 
 தமிழக டிஜிபி டி.கே. ராஜேந்திரன் மீது குட்கா முறைகேடு வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஆளும் கட்சிக்கு ஆதரவாகவும், தேர்தல் நடைமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது உரிய நடவடிக்கையும் எடுக்கமாட்டார். தேர்தலின்போது பல்வேறு முறைகேடுகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே, மக்களவைத் தேர்தலில் தமிழக டிஜிபியாக அவர் பணி செய்ய தடை விதிக்க வேண்டும் என மதுரை வழக்குரைஞர் கண்ணன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையிட்டார்.  இதனை விசாரித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →