தமிழ்நாடு

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

DIN


சென்னை: சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 07 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.75.27 ஆகவும், டீசல் லிட்டருக்கு 05 காசுகள் குறைந்து லிட்டர் ரூ.71.15 ஆகவும் உள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. அதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

மக்களவைத் தேர்தல் நடைபெறும் காலகட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை என்பது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய முக்கிய அம்சமாக விளங்குவதால், பெட்ரோலியப் பொருள்களின் விலையை கட்டுக்குள் வைத்திருக்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சி எடுத்து வருவதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில், பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 07 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.75.27 ஆகவும், டீசல் 05 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.71.15-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 5-இல் நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 6,120 போ் எழுதுகின்றனா்

ராஜா வாய்க்காலுக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

ரூ. 11.30 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

கணினிவழிக் குற்றங்கள் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு எஸ்.பி. எச்சரிக்கை

சிபிசில் நிறுவனத்தை கண்டித்து இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் மூதாட்டி மயக்கம்

SCROLL FOR NEXT