சென்னை: விரைவில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சஹூ திங்களன்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
நாடெங்கும் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் தமிழகம் இரண்டாவது கட்டத்தில் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதியன்று தேர்தலைச் சந்திக்கிறது.
அதற்கான வேட்பு மனுத் தாக்கலானது செவ்வாயன்று (மார்ச் 19) துவங்க உள்ளது.
இந்நிலையில் மக்களவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சஹூ திங்களன்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மக்களவை தேர்தல், இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த இந்த ஆலோசனை கூட்டத்தில், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்.பிக்களுடன் சாஹூ ஆலோசனை நடத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.