தமிழ்நாடு

கோயில் சொத்துகளை ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும் : உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

DIN


கோயில்கள் மற்றும் அதன் சொத்துகள் பாதுகாக்கப்பட வேண்டுமானால் தமிழகம் முழுவதும் உள்ள கோயில் நிலங்கள், சொத்துகளை டிஜிட்டல் மயமாக்கி ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
திருதொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு:  மதுரை கள்ளழகர் கோயிலுக்கு பல கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. ஆனால் அவை முறையாக பராமரிக்கப்படாமல் பல தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.  கோயிலுக்குச் சொந்தமான சொத்துகளை மீட்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லை. எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். 
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் என். கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன் திங்கள்கிழமை விசாரனைக்கு வந்தது. இதில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பணிந்தர் ரெட்டி ஆஜரானார். கோயில் ஆக்கிரமிப்பு சொத்துகளை மீட்பது குறித்து நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது என்றும் அவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். 
இதையடுத்து, நீதிபதிகள் தமிழகத்தில் உள்ள கோயில்கள் மற்றும் அதன் சொத்துகள் பாதுகாக்க வேண்டுமானால் தமிழகம் முழுவதும் உள்ள கோயில் நிலங்கள், சொத்துகளை டிஜிட்டல் மயமாக்கி ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அதேபோல சொத்து விவரங்களைப் புத்தகமாக அச்சடித்து கோயில் அலுவலகத்திலும், மக்களின் பார்வைக்கும் வைக்க வேண்டும். அந்த புத்தகங்களை அந்தந்தப் பகுதிகளுக்கு உள்பட்ட பத்திரப் பதிவு அலுவலக அதிகாரியிடம் கொடுத்து அதில் உள்ள சொத்துகளை யாருக்கும் பத்திரப்பதிவு செய்யக் கூடாது என சுற்றறிக்கை கொடுக்க வேண்டும் எனக் கூறினர். மேலும் நீதிபதிகள் இதுகுறித்த விரிவான உத்தரவுக்காக வழக்கை ஒத்திவைத்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT