தமிழ்நாடு

ராமநாதபுரம் அருகே ரூ. 1.35 லட்சம் பறிமுதல்

DIN


ராமநாதபுரம் அருகே உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் சென்ற ரூ. 1.35 லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  

பறக்கும் படை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் தேர்தல் விதிமீறல்களை கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நெடுஞ்சாலைகளில் வாகனச் சோதனையிலும் ஈடுபட்டுள்ளனர்.  

இந்நிலையில் பறக்கும்படை அதிகாரிகள் திங்கள்கிழமை காலை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். ராமநாதபுரம் அடுத்த நதிப்பாலம் பகுதியில் அவர்கள் வாகனச் சோதனையின் போது, அந்த வழியாக வந்த காய்கறி வியாபாரி கார்த்திக் குமார் வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் ரூ. 1.35 லட்சம் இருந்தது தெரியவந்தது. மேலும் அந்தப் பணத்துக்கான உரிய ஆவணங்கள் எதுவுமில்லை.  இதைத்தொடர்ந்து பணத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

தொடர்ந்து அதிகாரிகள் மாவட்டம் முழுவதும்  கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரை சிறையாக மாற்றியது மத்திய அரசு: மெஹபூபா முஃப்தி குற்றச்சாட்டு

நாளைமுதல் ‘அக்னி’ வெயில்

ஜம்மு-காஷ்மீா்: பாரமுல்லா தொகுதியில் ஒமா் அப்துல்லா வேட்பு மனுத் தாக்கல்

மக்களவைத் தோ்தலுக்கு பின் காங்கிரஸ் காணாமல்போகும்: அமித் ஷா

ரூ. 2,000 கோடி பிணையப் பத்திரம் ஏலம்: தமிழக அரசு அறிவிப்பு

SCROLL FOR NEXT