முகப்பு
தமிழ்நாடு

பாமக தலைவர் ராமதாஸுடன்  தேமுதிக வேட்பாளர்கள் சந்திப்பு 

பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ள தேமுதிக வேட்பாளர்கள் புதனன்று சந்தித்து பேசினார்கள்.

Updated On : 20 மார்ச், 2019 at 4:40 PM
பகிர்:

திண்டிவனம்: பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ள தேமுதிக வேட்பாளர்கள் புதனன்று சந்தித்து பேசினார்கள்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலைப் போலவே இந்த் தேர்தலிலும் பாமகவும், தேமுதிகவும் ஒரே அணியில் இணைந்து தேர்தலைச் சந்திக்கின்றன 

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸை  தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில்  தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் துணை செயலாளரும், கள்ளகுறிச்சி தொகுதி வேட்பாளருமான எல்.கே.சுதிஷ், கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளரும், வட சென்னை தொகுதி வேட்பாளருமான அழகாபுரம் மோகன்ராஜ் ஆகியோர் புதன் காலை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர்.

Advertisement

இந்த சந்திப்பின் போது தே.மு.தி.க. நிர்வாகிகளும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களுமான பார்த்தசாரதி, வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.