முகப்பு
தமிழ்நாடு

மக்களவைத் தேர்தலில் போட்டியா? : கமல் 'சஸ்பென்ஸ்'  பதில் 

மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடுவேனா? என்பது குறித்து விரைவில் தெரியவரும் என்று மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.

Updated On : 20 மார்ச், 2019 at 3:51 PM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 12:55 PM

சென்னை: மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடுவேனா? என்பது குறித்து விரைவில் தெரியவரும் என்று மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.

விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிட உள்ள முதல் கட்ட வேட்பாளர்களின் பட்டியலை கமல் வெளியிட்டுளளார்.

ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சித் தலைமைஅலுவலகத்தில் புதன் மதியம் அவர் 21 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார்

Advertisement

பின்னர் அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துக் கூறியதாவது:

தற்போது முதல் கட்டமாக 21 வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மீதமுள்ள முக்கிய தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் வரும் 24-ஆம் தேதி கோவையில் அறிவிக்கப்படும்.

அதேநாள் மக்கள் நீதி மையத்தின் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்படும் 

2019 மக்களவை தேர்தலில் நான் போட்டியிடுவேனா என்பது குறித்து 24 ஆம் தேதி அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.