தமிழ்நாடு

சிலைக் கடத்தல்: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டி.எஸ்.பி. காதர் பாஷா மீண்டும் கைது

சிலை கடத்தலில் தொடர்புடைய துணைக் காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) காதர் பாஷா பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் இன்று மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

DIN


சென்னை: சிலை கடத்தலில் தொடர்புடைய துணைக் காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) காதர் பாஷா பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் இன்று மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருக்கும் காதர் பாஷா, கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஏப்ரல் 4ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பவத்தின் பின்னணி
அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆளடிப்பட்டி கிராமத்தில் அரோக்கியராஜ் என்பவரின் வீட்டில் அஸ்திவாரம் அமைக்கும் பணியின்போது 6 சிலைகள் கிடைத்துள்ளன. இதைக் கைப்பற்றிய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்கள் காதர் பாஷா , சுப்புராஜ் ஆகியோர் சிலைக் கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய தீனதயாளனின் உதவியோடு, சிலைகளை விற்று பணத்தை எடுத்துக் கொண்டனர். 

இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததும், சிலையை கடத்தி விற்பனை செய்த குற்றச்சாட்டுக்கு ஆளான டிஎஸ்பி காதர் பாஷா, கடந்த 2017ம் ஆண்டு கும்பகோணத்தில் கைது செய்யப்பட்டார். இதனால், 2017ம் ஆண்டு ஜூன் 29 -ஆம் தேதி முதல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையே சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு பொன். மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பிறகு, ஏராளமான சிலைகள் கண்டெடுக்கப்பட்டு, குற்றவாளிகளும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டனர்.

இந்த நிலையில், நெல்லையில் பழம்பெரும் கோயில் சிலைகள் கடந்த 2007ம் ஆண்டு வெளிநாடுகளில் விற்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் காதர் பாஷாவுக்கு தொடர்பிருப்பதாகக் கண்டறியப்பட்டதை அடுத்து அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்கம்பியாள், உதவியாளா் தகுதிகாண் தோ்வு: டிச. 27, 28-க்கு மாற்றம்

தென்காசி அருகே இளைஞா் தற்கொலை

வன விலங்குகளால் விவசாயப் பயிா்கள் தப்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்

மத்திய அரசின் திட்டங்களுக்கும் மாநில அரசின் நிதியை பயன்படுத்த வேண்டிய கட்டாயம்: அமைச்சா் சிவசங்கா்

காவல் ரோந்து வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியுடன் கூடிய கண்காணிப்பு கேமரா வசதி அறிமுகம்

SCROLL FOR NEXT