தமிழ்நாடு

ஜெயலலிதா வாழ்க்கை திரைப்படமாகிறது!

DIN

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சுயசரிதை திரைப்படத்தில் அவருடைய கதாபாத்திரத்தில்  பாலிவுட்  நாயகி கங்கனா ரனாவத் நடிக்கிறார். 
ஜெயலலிதா, கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி காலமானார். அவரது வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் தமிழ், ஹிந்தி மொழிகளில் இத்திரைப்படம் தயாராகிறது. 
புரட்சித்தலைவி என ஜெயலலிதா அழைக்கப்பட்டதால், தமிழில் "தலைவி' என்றும், ஹிந்தியில் "ஜெயா' என்ற பெயரிலும் இத்திரைப்படம் தயாராகிறது. இப்படத்தை மதராசப்பட்டினம், தலைவா, தெய்வத் திருமகள் உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர் விஜய், இருமொழிகளிலும் இயக்குகிறார். 
இதுகுறித்து கதாநாயகியாக நடிக்கும் கங்கனா ரனாவத் கூறியதாவது:  ஜெயலலிதா இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பெண் 
சாதனாயாளர். அரசியல் வாழ்விலும், அதற்கு முன்பு அவர் ஈடுபட்டிருந்த திரைத்துறையிலும் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு இரு துறையிலும் "சூப்பர் ஸ்டாராக' வலம் வந்தவர். அவரது கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை பெரும் மரியாதையாக கருதுகிறேன் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து இயக்குநர் விஜய் கூறியதாவது: நாட்டின் புகழ்வாய்ந்த தலைவர்களில் ஜெயலலிதாவுக்கு முக்கிய இடமுண்டு. அவரைப்பற்றி திரைப்படம் இயக்குவது என்பது என் வாழ்வில் கிடைத்த பெரும் அங்கீகாரமாகவும், பொறுப்பு மிக்கதாகவும் கருதுகிறேன். இத்திரைப்படத்தை மிகுந்த கவனத்துடனும், நேர்மையுடனும் எடுத்து முடிப்பேன் என்று தெரிவித்தார். 
இத்திரைப்படத்தின் கதையை "பாகுபலி', "மணிகர்னிகா' திரைப்படங்களின் கதாசிரியரும், இயக்குநர் ராஜமவுலியின் தந்தையுமான கே.வி.விஜயேந்திர பிரசாத் எழுதுகிறார். விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் ஆர்.சிங் ஆகியோர் தயாரிக்கின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT