தமிழ்நாடு

சிவகங்கையில் காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் போட்டி 

DIN

சென்னை: சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 9 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரி தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ்  வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. 

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், எஸ். திருநாவுக்கரசர் ஆகியோருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.  சிவகங்கை தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. 

அதேசமயம் காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைவரும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ஞாயிற்றுக்கிழமை சந்தித்தனர். அப்போது தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசும் பொது, 'சிவகங்கை தொகுதி வேட்பாளர் இன்றைக்குள் அறிவிக்கப்படுவார். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு தான் பதவி வழங்கப்படும் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் முடிவெடுத்துள்ளதால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.

இந்நிலையில் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே சிவகங்கையில் பாஜக தேசிய செயலரான ஹெச்.ராசாவுடன் கார்த்தி சிதம்பரம் மோதுவது உறுதியாகியுள்ளது. 

காங்கிரஸ் வேட்பாளர்கள் விவரம்: 

திருவள்ளூர் (தனி): கே.ஜெயகுமார்

கிருஷ்ணகிரி: ஏ.செல்லகுமார்

ஆரணி: எம்.கே.விஷ்ணு பிரசாத்

கரூர்: ஜோதிமணி

திருச்சி: சு.திருநாவுக்கரசர்

தேனி: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

விருதுநகர்: மாணிக் தாக்கூர்

கன்னியாகுமரி:  ஹெச்.வசந்தகுமார்

புதுச்சேரி: வைத்திலிங்கம் 

சிவகங்கை - கார்த்தி சிதம்பரம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உளுந்து, எள், கடலை பயிா்களை சாகுபடி செய்ய அறிவுறுத்தல்

கட்டுகுடிப்பட்டியில் மஞ்சுவிரட்டு

செட்டிநாடு உணவுப் பொருள்கள் விற்பனைத் திருவிழா

கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவப் பயிற்சி

திருப்பத்தூரில் முதியவரிடம் பணம் திருட்டு

SCROLL FOR NEXT