தமிழ்நாடு

நீண்ட நேர பரிசீலனைக்கு பிறகு தமிழிசை சௌந்தரராஜனின் வேட்பு மனு ஏற்பு

DIN

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனின் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

அதில், தூத்துக்குடியில் பாஜக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மாநிலத் தலைவரும், வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜனின் வேட்பு மனு மீதான பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் இயக்குநராக உள்ளதை தமிழிசை தெரிவிக்கவில்லை என திமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தமிழிசை சௌந்தரராஜனின் வேட்பு மனு மீதான பரிசீலனை பகல் 1:30 வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நீண்ட நேர பரிசீலனைக்கு பிறகு தமிழிசை சௌந்தரராஜனின் வேட்பு மனுவை தேர்தல் அலுவலர் ஏற்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

SCROLL FOR NEXT