தமிழ்நாடு

தனிப்பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெறும்: முரளிதர ராவ்

மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் தெரிவித்தார்.

DIN

மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் தெரிவித்தார்.
 சென்னையிலிருந்து சனிக்கிழமை மதுரை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: பாஜக மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளது. 300 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும். கடந்த 2014-இல் வெவ்வேறு கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து 19 சதவீத வாக்குகளைப் பெற்றோம். 
தென்னிந்தியாவில் முக்கிய மாநிலமாக தமிழகம் உள்ளது. இந்தமுறை தமிழகத்திலிருந்து அதிக உறுப்பினர்களை தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மக்களவைக்கு அனுப்புவோம். 
அதிமுக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் முழு எழுச்சி பெற்றுள்ளது. திமுக- காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் யார் தலைமையில் ஆட்சி என சொல்ல முடியாத நிலையில் உள்ளனர். நாளை நமதே , நாற்பதும் நமதே என்பது பாஜகவின் நோக்கமாக உள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓய்வுபெற்ற சத்துணவுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

வாக்குத் திருட்டு காங்கிரஸின் குற்றச்சாட்டு; எதிா்க்கட்சி கூட்டணிக்கு தொடா்பில்லை: ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா

கான்கிரீட் கலப்பு இயந்திரத்தில் சேலை சிக்கியதில் பெண் தொழிலாளி உயிரிழப்பு

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

கூட்டுறவு வங்கி பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT