தமிழ்நாடு

10 இடங்களில் வெயில் சதம்: அனல் காற்று வீசும்

DIN

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை 10 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரிக்கு மேல் பதிவானது. அதிகபட்சமாக வேலூரில் 110 டிகிரி வெப்பநிலை பதிவானது. திங்கள்கிழமையும் இதே நிலை தொடரும், அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
 ஞாயிற்றுக்கிழமை திருச்சி, திருத்தணியில் தலா 108 டிகிரி, கரூர் பரமத்தியில் 106 டிகிரி, மதுரை விமான நிலையம், பாளையங்கோட்டையில் தலா 105 டிகிரி, தருமபுரியில் 104 டிகிரி, சேலத்தில் 103 டிகிரி, சென்னை மீனம்பாக்கத்தில் 102 டிகிரி, பரங்கிபேட்டையில் 100 டிகிரி வெப்பம் பதிவானது.
 இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியது: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை வழக்கத்தைவிட வெப்பநிலை அதிகமாகக் காணப்பட்டது. இந்த நிலை திங்கள்கிழமையும் தொடரும். சில பகுதிகளில் திங்கள்கிழமை அனல் காற்று வீசும். அதேநேரத்தில், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.
 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, வேலூர் மாவட்டம் சோளிங்கரில் 140 மி.மீ., திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் 70 மி.மீ., திருவள்ளூரில் 10 மி.மீ. மழை பதிவானது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்கம்: முழு விவரம்

நிக்கி!

ஒரே குடும்பத்தில் 5 பேருக்காக வீட்டு வாசலில் வாக்குச்சாவடி!

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT