தமிழ்நாடு

ஃபானி புயல் பாதிப்பு: ஒடிஷாவுக்கு தமிழக அரசு  ரூ.10 கோடி நிவாரண நிதி 

DIN

சென்னை: ஃபானி புயல் பாதிப்புக்கு உள்ளான ஒடிஷாவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி நிவாரண நிதி வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஞாயிறன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஃபானி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிஷாவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி நிவாரண நிதி வழங்கப்படுகிறது. 

ஃபானி புயலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக மக்கள் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்படுகிறது.

ஒடிஷா மாநிலத்திற்கு தேவையான உதவிகளை வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது

ஒடிஷா மக்களுடனான ஒற்றுமையையும்  ஒத்துழைப்பையும் காட்டுவதற்காக இந்த நிதியுதவி அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

SCROLL FOR NEXT