முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:50 AM
பகிர்:

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் துவங்கி விட்டதால் வெய்யில் வாட்டி வருகிறது. அதுவும் திங்களன்று சில இடங்களில் காலை 8 மணி அளவிலேயே வெயில் 100 டிகிரியைத் தொட்டு விட்டது.

இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக திங்களன்று சென்னை வானிலை மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழக உள் மாவட்டங்களில் 3 நாட்களுக்கு அனல்  காற்று வீசும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 8 சென்டி மீட்டரும், வேலூரில் 5 சென்டி மீட்டரும், கிருஷ்ணகிரி மாவட்டம் பேனுகொண்டபுரத்தில் 3 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

சென்னையில் வெப்பநிலை அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியசும்,  குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியசும் பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு  இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு  உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →