தமிழ்நாடு

தேர்தல் பறக்கும் படை சோதனை: மதுரையில் 3.5 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்

DIN


மதுரையில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டுசென்ற 3.5 கிலோ தங்க கட்டிகளை தேர்தல் பறக்கும் படையினர் இன்று பறிமுதல் செய்தனர். 

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலையொட்டி மதுரை மாவட்டம் முழுவதும் பேரவைத் தொகுதி வாரியாக, பறக்கும்படை மற்றும் நிலைக் கண்காணிப்புக் குழுவினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிட்டம்பட்டி சுங்கச்சாவடி அருகே தேர்தல் பறக்கும்படை குழுவினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக சென்னையில் இருந்து மதுரை நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் 3.5 கிலோ தங்க கட்டிகள் இருந்தது தெரியவந்தது.

காரில் வந்தவர்களிடம் 3.5 கிலோ தங்கத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லாததையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகளை  மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் ஒப்படைத்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT