தமிழ்நாடு

சூறைக்காற்றுடன் கோடை மழை: சுமார் 1 லட்சம் வாழை மரங்கள் சேதம்

DIN


திருச்சி மாவட்டத்தில் புதன்கிழமை இரவு சூறைக்காற்றுடன் பெய்த  கோடை  மழையால் சுமார் 1 லட்சம் வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன. மேலும், புறநகர் பகுதிகளில் மரங்களும் மின்கம்பங்களும் சாய்ந்ததால் மின்விநியோகமும் துண்டிக்கப்பட்டது.
திருச்சி மாவட்டத்தில் மே 7-ஆம் தேதி மாலையில் திடீரென கோடை மழை பெய்தது.  இதைத் தொடர்ந்து புதன்கிழமை இரவு 10 மணிக்கு  திடீரென சூறைக்காற்றுடன் பலத்த  மழை பெய்தது.  சுமார் 3 மணி நேரம் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையின் போது வீசிய சூறைக்காற்றில், முசிறி பகுதியில் சுமார் 1 லட்சம் வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்ததாகக்
 கூறப்படுகிறது. மேலும், திருவெறும்பூர், வாழவந்தான்கோட்டை, துவாக்குடி, அசூர், சோமரசம்பேட்டை பகுதிகளில் மரங்களும்,  மின்கம்பங்களும் சாய்ந்ததால் வியாழக்கிழமை காலை வரை மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. 
மழை அளவு:  திருச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8 மணி வரை,   அதிகபட்சமாக வாத்தலை அணைக்கட்டு பகுதியில்  101 மிமீ மழை  பதிவானது. மேலும், நந்தியாறு தலைப்பு பகுதி,முசிறி, சமயபுரம், தேவிமங்கலம், லால்குடி, துறையூர்,  திருச்சி மாநகர் உள்ளிட்ட பகுதிகளில்   பெய்த மொத்த மழை அளவு 386 மிமீ ஆகப் பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 5-இல் நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 6,120 போ் எழுதுகின்றனா்

ராஜா வாய்க்காலுக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

ரூ. 11.30 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

கணினிவழிக் குற்றங்கள் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு எஸ்.பி. எச்சரிக்கை

சிபிசில் நிறுவனத்தை கண்டித்து இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் மூதாட்டி மயக்கம்

SCROLL FOR NEXT