தமிழ்நாடு

மருத்துவப் படிப்புக்கான இட ஒதுக்கீட்டில் ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கும் ஒதுக்கீடு: நீதிமன்றம்

DIN


மதுரை: நடப்புக் கல்வி ஆண்டு முதல் எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய படிப்பில் இட ஒதுக்கீட்டு பிரிவில் பணியில் உள்ள ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கும் ஒதுக்கீடு வழங்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மாணவர் குறளரசன் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்படுவது போல பணியில் உள்ள ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கும் கல்வி இட ஒதுக்கீட்டில் ஒதுக்கீடு வழங்க வகை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி, பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டு இந்தியா திரும்பிய வீரர் அபினந்தனின் பிள்ளைக்கு எம்பிபிஎஸ் அல்லது பிடிஎஸ் படிக்க இட ஒதுக்கீடு வழங்கப்படாது. ஆனால், அவர் தனது பணியை ராஜினாமா செய்துவிட்டால் அவரது பிள்ளைக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்பது எந்த விதத்தில் நியாயம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT