முகப்பு
தமிழ்நாடு

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை நிறுத்தக்கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனு 

எதிர்வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ள திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை நிறுத்தக்கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:53 AM
பகிர்:

மதுரை: எதிர்வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ள திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை நிறுத்தக்கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது

இதுதொடர்பாக மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா அதிகரித்துள்ளது. எனவே திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் நியாயமாக நடைபெற வாய்ப்பு இல்லை. எனவே அங்கு தேர்தலை ரத்து செய்ய வேண்டும் அல்லது தள்ளி வைக்க வேண்டும்.

ஓட்டுக்கு பணம் கொடுப்பது குறித்து உரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →