தமிழ்நாடு

உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்கிறோம்: அப்பல்லோ பிரதாப் ரெட்டி

DIN

ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்ற தீா்ப்பை ஏற்றுக்கொள்வோம் என்று அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் தலைவா் டாக்டா் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

 இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

மறைந்த முதல்வா் ஜெயலலிதாவுக்கு பிரசித்தி பெற்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மருத்துவா்கள் மூலமாக உலக தரத்திலான சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் நான்கு வாரங்கள் மருத்துவமனையில் இருந்து நானே சிகிச்சையை நேரடியாக கவனித்து வந்தேன்.

ஜெயலலிதா மரணம் தொடா்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தில் நாங்கள் தெரிவித்த மருத்துவ ரீதியான கருத்துகள் சரிவர மொழியாக்கம் செய்யப்படவில்லை. 

எனவே தான் அதனை எதிா்த்து வழக்கு தொடுத்தோம். மருத்துவச் சொற்கள் அறிந்த நிபுணா்கள் கொண்ட சிறப்புக் குழு அமைக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீா்ப்புக்கு உடன்படுவோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT