தமிழ்நாடு

கமல்ஹாசனின் பிரசார கூட்டத்தில் முட்டை, கல் வீசிய பாஜக நிர்வாகி மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

DIN

கமல்ஹாசனின் பிரசார கூட்டத்தில் முட்டை, கல் வீசிய பாஜக நிர்வாகி மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கரூரை அடுத்த வேலாயுதம்பாளையத்தில் வியாழக்கிழமை அரவக்குறிச்சி தொகுதி மநீம வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து, அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் வாக்குகள்சேகரித்து அவர் மேலும் பேசியதாவது: 
எனது பிரசாரத்தைத் தடுக்கும் விதமாக, கோவை மாவட்டம், சூலூரில் பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் எனது விளம்பரம் தான் கிடைத்துள்ளது. மேலும் மக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது. இது எனக்கு பிளஸ் தான். நாங்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க மாட்டோம்; நேர்மையாக செயல்படுவோம். 

எங்கள் வேட்பாளர் தப்பு செய்தால் மக்களாகிய நீங்கள் கேள்வி கேட்கலாம் எனப் பேசிவிட்டு மேடையை விட்டு இறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அவரை நோக்கி கூட்டத்தில் இருந்து மர்மநபர்கள் முட்டை, கற்கள் வீசுப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால், அது கமல்ஹாசன் மேல்படவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் இச்சம்பவத்தில் தொடர்புடைய நபரைக் கைது செய்யவலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரமன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கட்சியினரிடம் சமாதானப் பேச்சு நடத்தினர்.

இதையடுத்து மறவாபாளையத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன்(25) என்ற இளைஞரை போலீஸார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். தொடர்ந்து அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ராமச்சந்திரன் கரூர் ஒன்றிய பாஜக இளைஞரணி பொதுச்செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

பர்மா - ஓர் அரசியல் வரலாறு

விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா

SCROLL FOR NEXT