தமிழ்நாடு

பள்ளிகளில் தூய்மை பணிகளை மேற்கொள்ள உத்தரவு

கோடை விடுமுறை முடிவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் பள்ளி வளாகங்களை துôய்மைப்படுத்த வேண்டும்  என  பள்ளிக்

DIN


சென்னை:  கோடை விடுமுறை முடிவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் பள்ளி வளாகங்களை துôய்மைப்படுத்த வேண்டும்  என  பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

 தமிழக பாடத்திட்ட பள்ளிகளில் கடந்த மார்ச் மாதம் பொது தேர்வுகள் முடிவடைந்தன.  இதையடுத்து பிற வகுப்புகளுக்கு ஏப்ரலில் பள்ளி இறுதித் தேர்வுகள் நடந்தன. பின்னர்  ஏப். 12-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. இன்னும் இரண்டு வாரங்களில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

இந்த நிலையில், அனைத்துப் பள்ளிகளுக்கும், பள்ளி கல்வித்துறை இயக்ககம் அனுப்பி உள்ள சுற்றறிக்கை: கோடை விடுமுறை முடிந்து  புதிய கல்வியாண்டில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. 

அதற்கு முன், பள்ளிகளின் உள் கட்டமைப்பு வசதிகளை சீரமைக்க வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும்  பராமரிப்பு பணிகளுடன் சுத்தப்படுத்தும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். 

பள்ளிகள் திறக்கப்படும் போது, மாணவர்களுக்கு உகந்த சூழலை பள்ளிகளில் ஏற்படுத்த வேண்டும். பள்ளிகள் திறக்கும் நாளில் மாணவர்களின் வகுப்புகள் தொடங்கும் அளவுக்கு, அனைத்து முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேம்பள்ளி செல்வபெருமாள் கோயில் கும்பாபிஷேகம்!

சிவகங்கையில் டிச. 20-இல் தனியாா்த் துறை வேலைவாய்ப்பு முகாம்

பள்ளி திறப்பு விழா - செயற்கை நுண்ணறிவு ஆசிரியா் அறிமுகம்!

வத்தலகுண்டு பேரூராட்சிக் கடைகள் ஏலத்தில் முறைகேடு: ஆட்சியரிடம் அதிமுகவினா் புகாா்

கோரிக்கை மனு எழுத பொதுமக்களிடம் ரூ. 100 வசூல்: காவல் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT