தமிழ்நாடு

பெண் திடீர் மரணம்: மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் நடை அடைப்பு

தினமணி

மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில்  வெள்ளிக்கிழமை தரிசனம் செய்ய வந்த பெண் மாரடைப்பால் உயிரிழந்ததால், கோயில் நடை அடைக்கப்பட்டு பரிகார பூஜை நடைபெற்றது. 

மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த நீலகண்டன் மனைவி மகேஸ்வரி(55). இவர் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக வெள்ளிக்கிழமை காலை சென்றுள்ளார்.  கோயிலுக்குள் சுவாமி தரிசனம் செய்வதற்காக நின்றிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து திருக்கோயில் ஊழியர்கள் மகேஸ்வரியை மீட்க முயன்றபோது அவர் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது. 

இதையடுத்து, சுவாமி, அம்மன் சந்நிதியில் திரையிடப்பட்டு வழிபாடு நிறுத்தப்பட்டது.   மேலும் கோயிலில் இருந்த பக்தர்கள் வெளியேற்றப்பட்டனர். கோயில் காவல் நிலைய போலீஸார் மகேஸ்வரியின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதையடுத்து திருக்கோயிலின் நடைகள் சாத்தப்பட்டன. மேலும் வெள்ளிக்கிழமை முகூர்த்த தினம் என்பதால் திருக்கோயிலில்  கோயிலில் திருமணத்துக்காக காத்திருந்த மணமகன், மணமகள் உள்ளிட்ட அனைவரும்  வெளியேற்றப்பட்டனர். 

கோயிலுக்குள் ஆகம விதிகளின்படி பரிகார பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் நடை திறக்கப்பட்டடு வைகாசி வசந்த உற்சவ நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து திருமணத்துக்காக கோயிலுக்கு வெளியே காத்திருந்தவர்களும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம.பி.: பாஜகவில் இணைந்தார் காங். எம்எல்ஏ

பாலியல் குற்றச்சாட்டு: மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம்

'இந்தியா' கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக 'வாக்கு ஜிஹாத்'

கர்நாடகத்துக்கு மத்திய பாஜக அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு: ஜெ.பி.நட்டா

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனத்தைத் தூக்கியெறிந்துவிடும்

SCROLL FOR NEXT