தமிழ்நாடு

அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது அதிமுக தேர்தல் ஆணையத்தில் புகார் 

அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது அதிமுக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளது.

DIN

சென்னை: அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது அதிமுக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளது.

தமிழகத்தில் திருப்பரங்குன்றம். அரவக்குறிச்சி, சூலூர் மற்றும் ஓட்டப்பிடாரம் (தனி) ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஞாயிறன்று காலை துவங்கி வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

இந்நிலையில் அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது அதிமுக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளது.

அதிமுக சார்பாக அளிக்கப்பட்டுள்ள புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

திமுக சார்பில் அதிக அளவில் வாக்காளர்கள் பேருந்துகளில் அழைத்து வரப்படுகிறார்கள். அத்துடன் தோட்டக்குறிச்சி மற்றும் வேலாயுதம்பாளையம் ஆகிய இடங்களில் வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்க இயலாமல், செந்தில் பாலாஜி தடுத்திருக்கிறார்.  

இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விசாரித்து தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT