தமிழ்நாடு

ரூ.2000 நோட்டு ஜெராக்ஸ் எடுத்து டோக்கன் வழங்கப்படுகிறது: அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு

DIN

ரூ.2000 நோட்டு ஜெராக்ஸ் எடுத்து டோக்கன் வழங்கப்படுகிறது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றஞ்சாட்டியுள்ளார். 

தமிழகத்தில் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 4 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் 1 மணி நிலவரப்படி சூலூர் - 48.04%, அரவக்குறிச்சி - 52.68%, திருப்பரங்குன்றம் - 47.09%, ஒட்டப்பிடாரம் - 45.06% வாக்குகள் வாக்குகள் பதிவாகியுள்ளது. 

இதுகுறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
தோல்வி பயத்தால், மக்களை திசை திரும்பும் செயலில் திமுக ஈடுபட்டு வருகிறது. அரவக்குறிச்சி வேலாயுதம் பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரூ.2 ஆயிரம் நோட்டு ஜெராக்ஸ் எடுத்து டோக்கன் வழங்கப்படுகிறது. 

மேலும் வாக்களிக்க விடாமல் பெரும்பாலான மக்களை திமுகவினர் அடைத்து வைத்துள்ளார்கள். போலீசில் புகார் கொடுத்தும் போதிய நடவடிக்கை இல்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT