தமிழ்நாடு

14 இடங்களில் வெயில் சதம்

DIN

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை 14 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவானது. அதிகபட்சமாக, திருத்தணியில் 113 டிகிரி வெப்பநிலை பதிவானது. 

வேலூரில் 110 டிகிரி, திருச்சியில் 107 டிகிரி, கரூர்பரமத்தி, மதுரை விமான நிலையத்தில் தலா 105 டிகிரி, சென்னை மீனம்பாக்கம், சேலத்தில் தலா 104 டிகிரி, தருமபுரி,  நாமக்கல், பாளையங்கோட்டை, பரங்கிபேட்டையில் தலா 102 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கம், நாகப்பட்டினம், கடலூரில் தலா 100 டிகிரி வெப்பநிலை பதிவானது. 

புதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரியில் 102 டிகிரி, காரைக்காலில் 100 டிகிரி வெப்பநிலை பதிவானது. தமிழகத்தில்  உள் தமிழகத்தில் சில இடங்களில் வெப்பநிலை வழக்கத்தைவிட  உயர வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியது: தமிழகத்தில் பல இடங்களில் ஞாயிற்றுக்கிழமை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. குறிப்பாக சில இடங்களில் அனல் காற்று வீசியது. உள்தமிழகத்தில் சில இடங்களில் மே 27, 28  தேதிகளில் வெப்பநிலை வழக்கத்தைவிட 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்பு உள்ளது
என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT