தமிழ்நாடு

தென் மாநிலங்களைப் புறக்கணித்ததால் தமிழகத்தில் பாஜகவுக்குப் பின்னடைவு

DIN

தென் மாநிலங்களைப் புறக்கணித்ததால்தான் தமிழகம், புதுச்சேரியில் பாஜக-வுக்கு தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறினார்.
இதுதொடர்பாக சென்னை விமானநிலையத்தில் அவர் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி:
பாஜக ஆட்சியில் தென் மாநிலங்களுக்கு எந்தவொரு மக்கள் நலத் திட்டங்களும் கொண்டுவரப்படவில்லை. விவசாயிகளின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. 
இதுபோல தென் மாநிலங்களைப் புறக்கணித்த காரணத்தால்தான் மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் பாஜக பின்னடைவைச் சந்தித்தது. அதே நேரம், வடமாநிலங்களில் அவர்கள் வெற்றி பெற்றிருப்பது பாஜகவினருக்கே வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது குறித்து கட்சி மேலிடம் அலசி ஆராயும். காங்கிரஸின் தேர்தல் அறிக்கை சிறப்பாக இருந்தபோதும், மக்கள் மத்தியில் காங்கிரஸின் பிரசாரம் எடுபடவில்லை. பின்னடைவுக்கான காரணங்களைக் கண்டறிய சில காலங்களாகும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 5-இல் நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 6,120 போ் எழுதுகின்றனா்

ராஜா வாய்க்காலுக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

ரூ. 11.30 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

கணினிவழிக் குற்றங்கள் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு எஸ்.பி. எச்சரிக்கை

சிபிசில் நிறுவனத்தை கண்டித்து இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் மூதாட்டி மயக்கம்

SCROLL FOR NEXT