இசையமைப்பாளர் இளையராஜாவுடன் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன். 
தமிழ்நாடு

இசை கொண்டாடும் இசை: இளையராஜா - எஸ்.பி.பி. சந்திப்பு

இசை கொண்டாடும் இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகையில் இளையராஜா - எஸ்.பி.பி. இருவரும் திங்கள்கிழமை ஈடுபட்டனர். 

DIN


இசை கொண்டாடும் இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகையில் இளையராஜா - எஸ்.பி.பி. இருவரும் திங்கள்கிழமை ஈடுபட்டனர். 
சில ஆண்டுகளுக்கு முன்பு, ராயல்டி உரிமை தொடர்பாக இளையராஜாவுக்கும், எஸ்.பி.பி-க்கும் இடையே பிரச்னை வெடித்தது.  இது இசை ரசிகர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
இதன் பின்னர் இருவரும் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளவில்லை. சினிமாவிலும் இருவரும் இணையவில்லை. 
அண்மைக் காலங்களில் நடந்த இளையராஜாவின் இசை நிகழ்ச்சிகளிலும் எஸ்.பி.பி. கலந்து கொண்டு பாடவில்லை.  இது குறித்து சமூக வலைதளங்களில் பெரும் விவாதமே நடந்து வந்தது. 
இந்த நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை  இசை கொண்டாடும் இசை என்ற பெயரில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இளையராஜாவுடன் எஸ்.பி.பி. இணையவுள்ளார்.
இந்த நிகழ்ச்சிக்கான ஒத்திகை சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் தொடர்ந்து நடந்து வருகிறது. ஒத்திகைக்காக இளையராஜாவை திங்கள்கிழமை சந்தித்தார் எஸ்.பி.பி. இருவரும் ஒருவரையொருவர் கட்டியணைத்து தங்களது நட்பைப் புதுப்பித்துக் கொண்டனர். 
ராயல்டி உரிமை பிரச்னைக்கு பிறகு, இருவரும் ஒரே மேடையில் தோன்றும் நிகழ்வாக இசை கொண்டாடும் இசை நிகழ்ச்சி அமையவுள்ளது. 
இதனால் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வர் சதானந்த கௌடாவின் வங்கிக் கணக்குகளை ஹேக் செய்து ரூ. 3 லட்சம் திருட்டு!

திருடர்களைப் பாதுகாப்பதை நிறுத்திவிட்டு தரவுகளைக் கொடுங்கள்! தேர்தல் ஆணையருக்கு ராகுல் கெடு!

சாம்பியன்ஸ் லீக்கில் எகிப்திய அரசன் முகமது சாலாவின் புதிய சாதனை!

22 நாள்களுக்குப் பிறகு வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை மீண்டும் தொடக்கம்!

சீனா மாஸ்டர்ஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து!

SCROLL FOR NEXT