தமிழ்நாடு

சிறந்த தமிழ் நூல் பரிசுப் போட்டிக்கு நூல்களை அனுப்பலாம்: தமிழ் வளர்ச்சித்துறை அறிவிப்பு

DIN


 தமிழ் வளர்ச்சித் துறை நடத்தும்  சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசுப் போட்டிக்கு  கடந்த 2018- ஆம் ஆண்டில் (1.1.2018 முதல் 31.12.2018 வரை)  வெளியிடப்பட்ட நூல்கள் 33 வகைப்பாடுகளின் கீழ் வரவேற்கப்படுகின்றன.  
இது குறித்து தமிழ் வளர்ச்சித்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:  இந்தப் போட்டியில் ஒவ்வொரு வகைப்பாட்டிலும் ஒரு நூல் மட்டுமே தெரிவு செய்யப்பட்டு, நூலாசிரியருக்கு ரூ.30 ஆயிரமும், அந்த நூலைப் பதிப்பித்த பதிப்பகத்தாருக்கு ரூ.10 ஆயிரமும் பரிசுகள் வழங்கப்பெறும்.  பரிசுப் போட்டிக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை  www.
tamilvalarchithurai.com  என்ற இணையதள முகவரியில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.  மேலும் தமிழ்வளர்ச்சி இயக்குநர், தமிழ்வளர்ச்சி வளாகம்  முதல் தளம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை 600 008 என்ற முகவரியில் தபால் மூலமாகவும்,  நேரிலும் பெற்றுக் கொள்ளலாம். 
அஞ்சல் மூலமாகப் பெற 23-க்கு 10 செ.மீ அளவிலான சுய முகவரியிட்ட உறையில்  ரூ.10 தபால் தலை ஒட்டி அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.  போட்டிக்கான விண்ணப்பத்துடன் 10 நூல் படிகளும் போட்டிக் கட்டணம் ரூ.100 கேட்புக் காசோலையாக தமிழ் வளர்ச்சி இயக்குநர், சென்னை என்ற பெயரிலோ அல்லது அலுவலகத்தில் நேரிலோ செலுத்தி அதற்கான செலுத்துச் சீட்டினையும் அளிக்க வேண்டும்.  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி ஜூலை 31 ஆகும் என அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் பெற 044- 2819 0412, 2819 0413 என்ற தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிநாட்டு நாய்களை வளா்க்க தடை விதிக்க வேண்டும்: தேசிய விலங்குகள் நல ஆணைய உறுப்பினா்

பாகாயம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சஸ்பென்ட்

வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

100 சதவீத தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

ஆறுமுகனேரியில் வியாபாரிகள் சங்க தலைவா், மகனைத் தாக்கியதாக இருவா் கைது

SCROLL FOR NEXT