தமிழ்நாடு

லாரி ஓட்டுநரைத் தாக்கி பணம், செல்லிடப்பேசி பறித்த மூவர் கைது

DIN


சங்ககிரியை அடுத்த வளையக்காரனூர் பேருந்து நிறுத்தம் அருகே வெள்ளிக்கிழமை லாரி ஓட்டுநரைத் தாக்கி பணம், செல்லிடப்பேசியைப் பறித்துச் சென்ற மூன்று நபர்களை பொதுமக்கள் பிடித்து தேவூர் போலீஸில் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனர்.  இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து மூன்று நபர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 
சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த வளையக்காரனூர், குட்டக்காடு பகுதியைச் சேர்ந்த துரைராஜ் மகன் ஞானசேகர் (35).  இவர் தனது சொந்த லாரியில் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கு குளிர் பானங்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்தார்.  
அப்போது அவர் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சங்ககிரியை அடுத்த வளையக்காரனூரில் லாரியை சாலையோரம் நிறுத்தி விட்டு வீட்டுக்குச் சென்று திரும்ப வந்து லாரியை மீண்டும் எடுக்க முயன்ற போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மூன்று பேர் அவரது  தலையில் மதுப்புட்டியால் தாக்கி,  அவரிடமிருந்து ரூ.2,500-ஐயும், ஒரு செல்லிடப்பேசியையும் பறித்துச் சென்று விட்டனர். 
இதையடுத்து, அவர் சப்தமிட்டுள்ளார். இதைக் கேட்ட ஊர் பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து,   ஞானசேகரைத் தாக்கிவிட்டு தப்பிச் சென்ற மூன்று நபர்களையும் துரத்திப் பிடித்து தேவூர் போலீஸில் ஒப்படைத்தனர். 
இதுகுறித்து தேவூர் போலீஸார் நடத்திய விசாரணையில்,  இந்த மூவரும் தேவூரை அடுத்த புள்ளாகவுண்டம்பட்டி அருகே உள்ள வினோபாஜி நகரைச் சேர்ந்த வேலுசாமி மகன் பிரசாந்த் (29),   சண்முகம் மகன் முத்துசாமி (30),  ராஜ் மகன் ரமேஷ் (32) என்பதும்,  லாரி ஓட்டுநரிடம் பணம், செல்லிடப்பேசியைப் பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரியாதை...

திருவள்ளூா் நகராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நீா்மோா்: 3 இடங்களில் வழங்க ஏற்பாடு

மோா்தானா அணை திறந்தும் நெல்லூா்பேட்டை ஏரிக்கு வராத நீா்: குடியாத்தம் மக்கள் ஏமாற்றம்

5 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

ஆண்டாா்குப்பம் முருகா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

SCROLL FOR NEXT