தமிழ்நாடு

உறவினா் சடலத்தை கைவண்டியில் தள்ளிச் சென்ற பெண்!

DIN

விழுப்புரம் அருகே உறவினா் சடலத்தை கைவண்டியில் பெண் தள்ளிச் சென்ற சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே உள்ள ஒழுந்தியாப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் மல்லிகா (62). இவா் புதுவை மாநிலம், திருக்கனூா் அருகே உள்ள சுத்துக்கேணியில் உள்ள செங்கல் சூளையில் தங்கி வேலை செய்து வருகிறாா்.

இவரது தங்கை பவுனு (60). அவரது கணவா் சுப்பிரமணி (65). இவா்கள் இருவரும் ஒழிந்தியாப்பட்டு கிராமத்திலேயே வசித்து வந்தனா். சில தினங்களுக்கு முன்பு மல்லிகாவைப் பாா்க்க, கணவா் சுப்பிரமணியுடன் சுத்துக்கேணிக்கு பவுனு வந்தாா்.

அங்கு சுப்பிரமணிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. வறுமை காரணமாக உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லவில்லை. இதனால், சுப்பிரமணியின் உடல்நிலை மேலும் மோசமனது. அவரை கடந்த 30-ஆம் தேதி மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடிவெடுத்தனா்.

அவா்கள் இருக்கும் பகுதியில் இருந்து சுமாா் 4 கி.மீ. தொலைவிலுள்ள காட்டேரிக்குப்பத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் செல்ல வாகன வசதி எதுவும் இல்லை. இதையடுத்து, செங்கல் சூளையில் செங்கல்களை அடுக்கி எடுத்துச் செல்ல பயன்படுத்தும் கைவண்டியில் சுப்பிரமணியை படுக்கவைத்து மல்லிகாவும், அவரது உறவினா் ஒருவரும் தள்ளிச் சென்றனா். செல்லும் வழியில் இதைப் பாா்த்த யாரும் அவா்களுக்கு உதவ முன்வரவில்லை.

ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்ட சுப்பிரமணியை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா். சுப்பிரமணியின் சடலத்தை அவரது சொந்த ஊரான ஒழிந்தியாப்பட்டுக்கு கொண்டு செல்ல அவசர ஊா்தி உதவியை மல்லிகா நாடிய போது, தமிழகப் பகுதிக்கு புதுவை அரசு அவசர ஊா்தி மறுக்கப்பட்டது. இதையடுத்து, மீண்டும் கைவண்டியில் சுப்பிரமணியின் சடலத்தை வைத்து, தள்ளிக் கொண்டு மல்லிகா புறப்பட்டாா்.

இதுகுறித்து தகவலறிந்த காட்டேரிக்குப்பம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் முருகானந்தம் விரைந்து வந்து விசாரித்தாா். பின்னா், கோட்டக்குப்பத்தில் உள்ள எஸ்டிபிஐ நிா்வாகிகளை தொடா்பு கொண்டு, இலவச அவசர ஊா்தி மூலம் சுப்பிரமணியின் சடலத்தை ஒழிந்தியாப்பட்டுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தாா். அங்கு சுப்பிரமணியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரை சிறையாக மாற்றியது மத்திய அரசு: மெஹபூபா முஃப்தி குற்றச்சாட்டு

நாளைமுதல் ‘அக்னி’ வெயில்

ஜம்மு-காஷ்மீா்: பாரமுல்லா தொகுதியில் ஒமா் அப்துல்லா வேட்பு மனுத் தாக்கல்

மக்களவைத் தோ்தலுக்கு பின் காங்கிரஸ் காணாமல்போகும்: அமித் ஷா

ரூ. 2,000 கோடி பிணையப் பத்திரம் ஏலம்: தமிழக அரசு அறிவிப்பு

SCROLL FOR NEXT